Saturday, December 18, 2010

முன்னமவனுடைய நாமம் கேட்டாள்,
மூர்த்தியவனிருக்கும் வண்ணம் கேட்டாள்,
பின்னே அவனுடைய ஆரூர் கேட்டாள்,
பேர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்,
அன்னையுமத்தனையுமன்றே நீத்தாள்,
அகன்றாளவ்விடத்தாராசாரத்தை,
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்,
தலைபட்டாள் நங்கை தலைவன் தாளே.
- அப்பர்

No comments: